புதிய பேருந்துகள் சேவை : கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்

புதிய பேருந்துகள் சேவை : கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் 3 புதிய பேருந்துகள் சேவை : கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் 3வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவையை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். நெல்லை போக்குவரத்து மண்டலத்திற்கு புதிதாக 30 பஸ்கள் வந்துள்ளன. இதில் தூத்துக்குடியில் இருந்து திருப்பூருக்கு ஒரு பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு இரண்டு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கனிமொழி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நெல்லை மண்டல போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தசரதன், பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், கிளை மேலாளர்கள் கார்த்திக், ரமேஷ் சுரேஷ்குமார், தென் மண்டல தொழிற்சங்க பொது மேலாளர் தர்மன், தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், காந்தி, சேகரன், மரிய தாஸ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல் வட்ட செயலாளர்கள் கதிரேசன் வழக்கறிஞர் சதீஷ்குமார் கங்கா ராஜேஷ் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண் குமார், மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்..
Next Story