ஓடைக்குள் பைக் விழுந்ததில் மீனவர் பலி!
Thoothukudi King 24x7 |22 Aug 2024 6:54 AM GMT
தூத்துக்குடியில் ஓடைக்குள் பைக் விழுந்ததில் மீனவர் பலியானார்.
தூத்துக்குடியில் ஓடைக்குள் பைக் விழுந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயல் அன்னை தெரசா காலனியைச் சேர்ந்தவர் சேகர் மகன் செரிசன் (24), மீனவரான இவர் கடந்த 18ஆம் தேதி இரவு தனது வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு மதிகட்டான் ஓடை பாலத்தில் வரும்போது திடீரென பாலத்தின் சுவரில் பைக் மோதி ஓடைக்குள் பாய்ந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி செரிசன் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற மகனை காணவில்லை என்று அவரது தந்தை ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே இன்று காலை மதிகட்டான் ஓடையில் ஒரு சடலம் மிதப்பதாக முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், அங்கு பிணமாக கடந்தவர் செரிசன் என்பது தெரியவந்தது. அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடையில் கிடந்த பைக்கும் மீட்கப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story