ராகவேந்திரா சேவா பொதுநல அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு விழா

ராகவேந்திரா சேவா பொதுநல அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு விழா
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா பொதுநல அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது.
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா பொதுநல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள லட்சுமி திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜோதி காமாட்சி வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி,செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன்,பாலமுருகன். சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பஜ்ரங் நர்த்தனாலயா மாணவிகள் யுவஸ்ரீ, வைஷ்ணவி, திரிலோக சனா, லக்ஷயா நாச்சியார் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை ஆசிரியை ராஜேஸ்வரி ஸ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றையும், அன்னதானத்தின் மகிமையும் பற்றி ஆன்மீக சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு. மரக்கன்றுகளையும், மஞ்சள் துணிப்பை உபயோகத்தையும். சிறுவர் சிறுமிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் சிலம்ப கம்புகளையும் வழங்கினார்கள்.
Next Story