அமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
Thoothukudi King 24x7 |22 Aug 2024 7:39 AM GMT
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை செப். 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் என அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை தொடர்பான அனைத்தும் தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சார்பு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்தராமகிருஷ்ணன், ஆனந்த பத்மநாதன் ஆகியோர் ஆஜராகினர். இதையடுத்து, வழக்கு விசாரணையை செப். 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டார்.
Next Story