டெங்கு மலேரியா காய்ச்சல் பரவுவதை தடுக்க டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் அறிவுரை
Tiruchengode King 24x7 |22 Aug 2024 7:58 AM GMT
டெங்கு மலேரியா காய்ச்சல் பரவுவதை தடுக்க டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் அறிவுரை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளில் பணிபுரியும் டெங்கு ஒழிப்பு பரப்புரையாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆணையாளர் சேகர் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் பரப்புரையாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்கள்.மழைக்காலம் நெருங்குவதால் நகராட்சி டெங்கு ஒழிப்பு பரப்புரையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் ஒவ்வொரு வார்டு பகுதிகளுக்கும் நகராட்சி ஊழியர்களுடன் சென்று அந்தந்த பகுதிகள் சுத்தமாக உள்ளதா எனவும் கொசு மருந்து அடித்தல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கூறினார்கள்.மேலும் பொதுமக்கள் நகராட்சி பணிக்கு வரும் பரப்புரையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை பகுதியில் புகை மருந்து அடிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் திவ்யா வெங்கடேஸ்வரன், புவனேஸ்வரி உலகநாதன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்
Next Story