தோப்பூரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
Karur King 24x7 |22 Aug 2024 9:24 AM GMT
தோப்பூரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
தோப்பூரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, தென்னிலை மேல் பாகம் கிராமத்தில் உள்ள தோப்பூரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன், அருள்மிகு ஸ்ரீ செல்வகுமாரசாமி, அருள்மிகு ஸ்ரீ கருப்பணசாமி கோவில் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் நடைபெற்ற யாக வேள்வியில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று, கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர் சிவாச்சாரியார்கள். இதனைத் தொடர்ந்து அத்தனூர் அம்மன், செல்வக்குமாரசாமி, கருப்பணசாமி ஆகிய தெய்வங்களுக்கு மகாதீபாதாரணை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்னிலை மேல் பாகம் ஊராட்சியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story