பரமத்தியில் கிரிக்கெட் விளையாடிய போது இளைஞர் மயங்கி விழுந்து பலி.
Paramathi Velur King 24x7 |22 Aug 2024 11:30 AM GMT
பரமத்தியில் கிரிக்கெட் விளையாடிய போது இளைஞர் மயங்கி விழுந்து பலியானது குறித்து போலீணார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர், ஆக.22- பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பஜனைமடத் தெருவை சேர்ந்தவர் குருநாதன்(42). சிவில் என்ஜினீயர். இவரதுமனைவி விஜயலட்சுமி (34). இவர்களுக்கு ஜீவந்த் என்ற மகனும், ஆச்சாரியா என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் குருநாதன் பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குருநாதனை பரிசோதனை செய்த மருத்திவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குருநாதனின் மனைவி விஜயலட்சுமி பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதா வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குருநாதன் இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story