ஊத்தங்கரை பேருந்து நிலையம் எதிரில் நகரப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி இளைஞர்ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

ஊத்தங்கரை பேருந்து நிலையம் எதிரில் நகரப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி இளைஞர்ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
ஊத்தங்கரை பேருந்து நிலையம் எதிரில் நகரப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி இளைஞர்ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை கட்டுப்பாட்டில் இயங்கும் U10 என்ற நகர பேருந்து ஊத்தங்கரை ரவுண்டானாவில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வலது புறமாக சென்று திரும்ப வேண்டிய நேரத்தில் எதிர் திசையில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து ஊத்தங்கரை ரவுண்டானா நோக்கி வந்த இருசக்கர வாகனத்தில் வந்த ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியை சார்ந்த இளைஞர் ராகுல் என்பவர் மீது நகரப் பேருந்து கவன குறைவாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் இளைஞர் கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் சம்பவ பகுதிக்கு நேரில் சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வரும் அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அடிக்கடி இது போன்ற சிறு சிறு விபத்துகளில் சிக்கி தவிக்கின்றது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தமிழக அரசு இதில் உடனடியாக கவனம் கொண்டு காலாவதியான பேருந்துகள் அனைத்தையும் மாற்றி விட்டு புதிய பேருந்துகள் வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
Next Story