சர்வையார்கள் சங்கம் சார்பில் நிதிதுறைசெயலாளர் முறையீடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிதித்துறைச் செயலாளரை கண்டித்து சர்வையார்கள் சங்கம் சார்பில்முறையீடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிதித்துறைச் செயலாளரை கண்டித்து முறையீடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில அளவிட்டாளர் (சர்வையர்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிதித்துறை செயலாளருக்கு முறையீடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முரளி வானன் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தில் 50க்கும் மேர்ப்படவர்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் நில அளவைத்துறையில் நில உரிமை பதிவுகள் முறைப்படுத்தி1982-ஆம் ஆண்டு நில உடமை பதிவு மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் திட்ட செயல்பாட்டிற்காக பத்தாயிரம் தொகுப்பூதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் படிப்படியாக நிரந்தர பணியிடத்தில் ஈர்க்கப்பட்டனர் என்றும் அரசால் தொடங்கப்பட்ட நில அளவை திட்டங்கள் முடிவுற்ற நிலையில் புதிய திட்டங்கள் தொடங்கப்படாததால் தொகுப்பூதிய பணியாளர்கள் 'உபரி' என்று துறையால் கணக்கிடப்பட்டு பணியாளர்கள் பணி நிரவல் அடிப்படையில் பல்வேறு துறைகளுக்கு நிரந்தர பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர் என்றும் நில அளவைத்துறையில் 1982-க்கு பிறகு புதிய நியமனம் இல்லாததாலும், புதிய நியமன தடையாணையாலும், பணி ஓய்வு காரணமாகவும் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் 2013-ஆம் வரை நியமனம் இல்லாததால் 292 நில அளவர்கள், 702 குறுவட்ட அளவர்கள் 800-க்கும் மேற்பட்ட சார் ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மேலும் 2013-ல் நியமனம் செய்யப்பட்ட நில அளவர்கள் துறைத்தேர்வு தேர்ச்சியுடன் தகுதிக்காண் பருவம் முடிக்கவேண்டியுள்ளதால் அடுத்தடுத்த பதவி உயர்வுகள் வழங்க இயலதா நிலை ஏற்பட்டது என்றும் மேலும் குறுவட்ட அளவராக பதவி உயர்வு பெற்றிட குறைந்தது 2 வருடமாகும் என்று கருதிய அரசு இதனை சரிசெய்யும், தொடர்ச்சியாக நில அளவர் நியமனம் செய்திடவும் வருவாய்த்துறை அரசானை எண். 78/214-ன் படி (நிதித்துறை-வருவாய் U.O.NO.69143/2023) நிதித்துறை ஒப்புதலுடன் 702 குறுவட்ட அளவர் பணியிடங்களும் 53 வட்ட ஆவண வரைவாளர் பணியிடங்களையும் நில அளவர் பணியிடங்களாகவும், வரைவாளர் பணியிடங்களாகவும் தரம் இறக்கி ஆணைகள் வெளியிடப்பட்டது என்றும் அரசாணையில் பதவி உயர்வுக்கு தகுதியான நபர்கள் இருப்பின் தரம் இறக்கப்பட்ட பதவிகளை மீள தரம் உயர்த்திக்கொள்ளலாம். என்று நிதித்துறை ஒப்புதலுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016, 2019-ஆம் ஆண்டுகளில் சுமார் 200 நில அளவர் பணியிடங்கள் குறுவட்ட அளவர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுக்காலமாக நல அளவர் பணியிடம் தரம் உயர்த்த நிதித்துறை ஒப்புதல் வழங்காததால் மாநிலம் முழுவதும் நில அளவர்களுக்கு பதவி உயர்வு தர முடியாத நிலை தொடர்கின்றது என்றும் எனவே நில அளவை இயக்கத்தாலும், வருவாய்த்துறை செயலாளராலும் குறுவட்ட அளவராக தரம் உயர்த்த நிதித்துறை செயலாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட கோப்பின் மீது விரைந்து ஒப்புதல் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வினோத், மாவட்ட துணை தலைவர் பூபதி, உறுப்பினர்கள், ரவி,முருகன்,ஜெயபிரகாஷ், நீலகண்டன். உள்ளிட்டோர் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிட தக்கது
Next Story