திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அச்சம்!
Tirupathur King 24x7 |23 Aug 2024 2:32 AM GMT
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அச்சம்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அச்சம்! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து அன்றாட பல்வேறு கோரிக்கை முன்வைத்து அலுவலகம் வந்து செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் 15 துறை சார்ந்த பணிகள் சம்பந்தமாக அலுவலர்களையும் அதிகாரிகளையும் பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை அதிக பொதுமக்கள் நடமாட்டத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கால்நடை பராமரிப்பாளர்கள் தங்களின் கால்நடைகளை கட்டி வளர்க்காமல் அவிழ்த்து விட்டு பராமரித்து வருவதால் கால்நடைகள் சாலைகளிலும் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் சுற்றித் திரிவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இது மட்டுமல்லாமல் தற்போது அதிக அளவில் மக்கள் நடமாடும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடைகளும் தெரு நாய்களும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பூங்காவில் சுற்றி திரிந்தும் படுத்து மேய்ந்தும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அலுவலகத்தில் இருந்து வெளியேயும், உள்ளேயும் வந்து செல்லும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே அலுவலகத்திற்குள் சுற்றித் தெரியும் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்....
Next Story