மேயரிடம் மனு அளித்த வியாபாரிகள்
Tirunelveli King 24x7 |23 Aug 2024 3:22 AM GMT
மேயரிடம் மனு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணனிடம் ஜங்ஷன் பகுதி வியாபாரிகள் நேற்று மனு அளித்தனர்.அதில் மேம்பாலம் மேற்கு பகுதியில் இரடுக்கு மேம்பாலம் கீழ்பகுதியில் நாங்கள் வியாபாரம் செய்து வருகின்றோம். எங்கள் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் தண்ணீர் செல்லாமல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வியாபாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த நிகழ்வின் பொழுது வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story