வார இறுதி நாட்கள், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு
Salem (west) King 24x7 |23 Aug 2024 3:28 AM GMT
சேலம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பண்டிகை மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் சேலம் கோட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாட்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதாவது, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முன்பதிவு மையம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், திருவண்ணாமலை மற்றும் ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் முன்பதிவு செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Next Story