ஆன்ட்டி ரவுடி டீம் தீவிர ரோந்து பணி: எஸ்பி உத்தரவு
Thoothukudi King 24x7 |23 Aug 2024 4:28 AM GMT
தூத்துக்குடியில் ஆன்ட்டி ரவுடி டீம் தீவிர ரோந்து பணி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் ஆன்ட்டி ரவுடி டீம் (Anti Rowdy Team) காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தீவிர ரோந்து பணி மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று மாலை முறப்பநாடு, வல்லநாடு ஆகிய பகுதிகளுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அங்கு பணியில் இருந்த ஆன்ட்டி ரவுடி டீம் (Anti Rowdy Team) காவலர்களை தணிக்கை செய்து அறிவுரைகள் வழங்கினார். ஏற்கனவே மாவட்ட முழுவதும் 350 குற்ற பட்டியலிடப்பட்ட இடங்களில் ஆன்ட்டி ரவுடி டீம் காவலர்கள் (Anti Rowdy Team) துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆன்ட்டி ரவுடி டீம் (Anty Rowdy Team) போலீசார் பணிகள் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு போன்ற பகுதிகளில் ரவுடிகளை கண்காணித்து குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க முழு நேரமும் ஆன்ட்டி ரவுடி டீம் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடவும், மேலும் கமாண்டோ பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சி பெற்ற காவலர்களை ஆன்ட்டி ரவுடி டீம் -ல் (Anti Rowdy Team) ஈடுபடுத்தவும் உத்தவிட்டார். மேலும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடம் மூலம் (GIS Map) குற்ற வரைபடம் (Crime Map) தயாரித்து அதன் அடிப்படையில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story