கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொடூர கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு திருச்செங்கோட்டில் கண்டன ஊர்வலம்

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொடூர கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு திருச்செங்கோட்டில் கண்டன ஊர்வலம்
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட கண்டன பேரணி நடைபெற்றது தனியார் தொண்டு நிறுவனத்தினர் நடத்திய இந்த கண்டன பேரணிக்கு திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள்மகேஸ்வரி, செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன்,சண்முகவடிவு,ராதா சேகர்,செல்லம்மாள் தேவராசன்,திவ்யா வெங்கடேஸ்வரன், சம்பூரணம், ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கிய பரணி வடக்கு ரத வீதி கிழக்கு ரத வீதி தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது பேரணியில் சென்றவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி வேண்டும் எனவும்இது போன்ற பாலியல் வன்கொடுமைகளை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story