கலெக்டர் அலுவலகத்தில் மோதிய சகோதரர்கள் போலீசில் ஒப்படைப்பு

கலெக்டர் அலுவலகத்தில் மோதிய சகோதரர்கள் போலீசில் ஒப்படைப்பு
X
நாகர்கோவிலில்
நாகர்கோவிலில் இயங்கும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்க பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அத்திக்கடை என்ற பகுதியை சேர்ந்த நவீன் (22) என்பவர் தனது உறவினர்களை அரசு  தங்கும் விடுதியில் சேர்ப்பது தொடர்பாக அவரது சகோதரர் பிரவீன் என்பவருடன் கலெக்டர் அலுவலகத்தில் வந்துள்ளனர்.       அப்போது சகோதரர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் கெட்ட வார்த்தைகள் பேசி தாக்கி கொண்டனர். அப்போது குழந்தைகள் நல அலுவலகத்தில் இருந்தவர்கள் போதையில் காணப்பட்ட  நவீனை பிடித்து, கைகளை கட்டி வைத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.       நேசமணி நகர் போலீசார் சகோதரர்கள் மது போதையில் இருந்ததால் எச்சரித்து அனுப்பினர்.
Next Story