சாமிதோப்பு தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
X
இன்று நடந்தது
கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்று விழா நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும்,5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டு பதியை சுற்றி வலம் வந்து திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.        திருக்கொடியை பால பிரஜாதிபதி ஏற்றி வைத்தார். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.      வருகிற  8-ம் திருவிழா அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சிஅளிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடை பெறுகிறது.        9-ம் திருவிழா அன்று அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் திருவிழா அன்று இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் திருவிழா அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.       அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.  இன்று துவங்கிய இந்த கொடியேற்று விழாவில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story