தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட வேண்டும் விஜய்சரவணன் மாவட்ட செயலாளர் அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட வேண்டும் விஜய்சரவணன் மாவட்ட செயலாளர் அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட வேண்டும் விஜய்சரவணன் மாவட்ட செயலாளர் அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் ஆகஸ்ட் 25 வருமை ஒழிப்பு தினம், இந்த நன் நாளில் தலைவர் விஜயகாந்த் அவர்கள் திரைத்துறையில் இருந்த பொழுதிலிருந்து அரசியல் பயணத்தில் இருந்த பொழுதிலும் தன் சம்பாதித்த பணத்தை பெரும்பாலும் நல்ல திட்டங்களுக்காகவும் உதவிகளை செய்து வந்த தலைவர் விஜயகாந்த், பசியோடு யார் வந்தாலும் அவர்களுக்கு உணவளித்து பசியாற்றக்கூடிய ஒரு மனிதநேயம், அதேபோல அரசியல் களத்தில் மற்ற நடிகர்களைப் போல வருவேன் வரமாட்டேன் என்று பூச்சாண்டி வேஷம் போடாமல் அரசியல் களத்தில் நேரடியாக இறங்கி மக்களுக்காக மக்கள் பிரச்சனையை முன்வைத்து, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற இயக்கத்தை துவக்கி, இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற தாரக மந்திரத்தோடும், விஜயகாந்த் அவர்களின் கொள்கை உண்ண உணவு ,உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இது மூன்றும் என் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று சொன்ன தலைவர் விஜயகாந்த், அதேபோல பாமர மக்கள் அனைவருக்கும் கல்வி தரம் தனியார் நிறுவனத்திற்கு இணையாக கொடுக்க வேண்டும் என்று விரும்பிய தலைவர் விஜயகாந்த், மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும், ரேஷன் பொருள் வீடு தேடி வர வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், முதியோர்கள் பாதுகாக்க வேண்டும் என தொலைநோக்கு சிந்தனையோடு, வாழ்ந்த தலைவர் விஜயகாந்த் அவர்கள் அவர் அரசியலில் ஆளும் கட்சி ஆக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி தவறு என்றால் தட்டிக் கேட்க தயங்காத ஒரு தலைவனாக உருவெடுத்தவர் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள், இன்று தமிழகமே தவறை விட்ட ஒரு தலைவர் விஜயகாந்த் என்று மக்கள் மத்தியில் வருத்தம் இருந்து கொண்டு தான் இருக்கிறது, வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார் என்ற சொல்லுக்கு சொந்தக்காரராக, வாழ்ந்தார் வாழ்ந்தார் விஜயகாந்த் மக்களுக்காகவே வாழ்ந்தார் என்ற சொல்லுக்கு இணங்க, வாழ்ந்து மறைந்தாலும் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தலைவர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்கள், பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக நாமக்கல் வடக்கு மாவட்டம் முழுவதும், குமாரபாளையம், திருச்செங்கோடு, இராசிபுரம், ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், உள்ள அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் மற்றும், ஊராட்சி பகுதி, வார்டு பகுதிகளில், கழகக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இலவச வேஷ்டி சிலைகள், பள்ளி குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள், மற்றும் மாவட்ட முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அன்னதானம் வழங்குதல், 150 இடங்களில் கழக கொடியேற்றி சிறப்பாக நமது தலைவர் பிறந்த நாளை கொண்டாட வேண்டும், என கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Next Story