பாலமலையில் கல்குவாரி நடத்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

பாலமலையில் கல்குவாரி நடத்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
பாலமலையில் கல்குவாரி நடத்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா புன்னம் கிராமத்தில், சத்யா என்ற நிறுவனத்தினர் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் பவித்திரம், பாலமலை, பரணி மகாலில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறுப்பு அலுவலர் ஜெயக்குமார் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள், கல்காரி உரிமையாளர்கள் என ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கல்குவாரி அமைப்பதனால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை டி ஆர் ஓ முன்னிலையில் பதிவு செய்தனர். அப்போது கல்குவாரி அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்களும், கல்குவாரி அமைப்பதனால் உள்ளூரில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பொதுமக்கள் கூறும் கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து, அதனை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story