விசிக தலைவர் திருமாவளவன் குறித்து சோசியல் மீடியாவில் அவதூறு
Tiruchirappalli (East) King 24x7 |23 Aug 2024 9:55 AM GMT
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி எஸ்.பியிடம் கட்சியினர் புகார்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் தலைமையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம்புகார் மனு அளித்தனர். புகார் மனுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர், தொல்.திருமாவளவன் மீது Colinroy@RoyKum990323394 என்ற ஐடி கொண்ட சமூக வலைதளத்தில் அவரது உழைப்பையும், அர்ப்பணிப்பையும் களங்கப்படுத்தும் வகையில், அவருடைய நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக அவதூறு பதிவை பதிவிட்ட நபரை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வின் போது மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், இளம்சிறுத்தைகள் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அரசு, நிர்வாகி யாசஃப் அராபத், ஏர்போர்ட் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story