பொத்தனூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி வேலூர்,ஆக,23: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகுளாமுகி அம்மன் உடன் உரை ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஸ்ரீ முருகன் ஸ்ரீ காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கு ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது தேவதா அணுகை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாகுதி நடைப்பெற்றது. இன்று நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று மகா பூர்ணாகுதி நடைப்பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைப்பெற்றது. சிவாச்சாரியர்கள் குடத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரணை காண்பிக்கப்பட்டது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story