கரூர் அருகே பள்ளி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூவர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
Karur King 24x7 |23 Aug 2024 10:14 AM GMT
கரூர் அருகே பள்ளி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூவர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
கரூர் அருகே பள்ளி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூவர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு. கரூர் அருகே பள்ளி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், இனுங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ராம் பிரசாத் வயது 24. இவருக்கும் கரூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய 10-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி சிறுமிக்கும் கடந்த 20 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத அந்த பள்ளிச்சிறுமியின் தாயார், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் துறையினர், சிறுமியை திருமணம் செய்து கொண்ட ராம் பிரசாத், அவரது தாயார் செல்வி மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய மூன்று பேர் மீதும், கரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story