ஊதியூர் அருகே நகை திருட்டு பெண் கைது
Kangeyam King 24x7 |23 Aug 2024 12:19 PM GMT
ஊதியூர் கொடுவாய் அருகே நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை முதியோர் காவல் துறையினர் கைது செய்தனர்
காங்கேயம் அடுத்த நிழலி கிராமம் கொடுவாய் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது32). இவரது பாட்டி சுப்பாத்தாள் (80). இவர் தனியாக அவரது வீட்டில் வசித்து வருகிறார். மேலும் இவர் சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வீட்டில் ஆயத்தாள் @ ஆழி (50) என்பவர் குடியிருந்து கொண்டு புடவை வியாபாரம் செய்துவருகின்றார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி சுப்பாத்தாள் அணிந்து இருந்த 7 பவுன் சங்கிலி மற்றும் 3/4 பவுன் மோதிரத்தை பாலிஷ் போட்டு தருவதாக கூறி வாங்கிச் சென்று போலி கவரிங் நகையை மாற்றி கொடுத்துள்ளார். நகைக்கு பாலிஷ் போட்டுள்ளதாக சுப்பாத்தாள் பேரன் பேரன் கார்த்தியிடம் தெரிவித்துள்ளார். நகையை வாங்கி பார்த்த கார்த்தி பாட்டி ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதை தெரிந்து அதிர்ச்சியடைந்து பின்னர் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் ஊதியூர் காவல் துறையினர் ஆயத்தாள் @ ஆழி விசாரணை செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Next Story