தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் சார்பு ஆய்வாளர்

X
சிவகங்கை நகர் பகுதியில் போலீசார் பொதுமக்களை வளைத்து வளைத்து தலைக்கவசம், உரிய ஆவணம் இல்லை என பல்வேறு வழக்குகளை தினந்தோறும் பதிவு செய்து வருகிறார்கள் இந்நிலையில் பல காவலர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவர்களுக்கு எவ்வித அபராதமோ, வழக்கோ பதிவு செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும்போது இன்று சமூக வளையத்தில் சிவகங்கை நகர் காவல் சார்பு ஆய்வாளர் சண்முகப்பிரியா தனது இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் பயணிக்கும் போட்டோ, வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதனைக் கண்ட சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ஊருக்கு தான் உபதேசமா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
Next Story

