மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு  தடுப்பு   நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது    .
மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தகவல்
மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தகவல். டெங்கு காய்ச்சல் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் ஆகும். இந்த வைரஸ் ஆனது ஏடீஸ் என்ற கொசு (Aedes Mosquito) வகையிலிருந்து பரவக்கூடியதாகும். இவ்வகை கொசுக்கள் மழைக்காலங்களில் முட்புதர்கள், குடிநீர் சேகரிக்கும் தொட்டிகள், சாலைகளில் தேக்கமாகும் மழைநீர்களில் வளரும் தன்மை உடையது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் உள்ளது, 2023 ஆம் வருடம் மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை 89 நபர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்தனர். 2024 ஆம் ஆண்டு மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை 15 நபர்கள் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் தொற்று பாதிப்பு மிகக்குறைவாக உள்ளது. டெங்கு காய்ச்சல் தொற்று கட்டுப்பாட்டில் வைப்பதற்கு மாநகராட்சியின் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது வருகிறது. 1) மதுரை மாநகராட்சியின் மாநகர்நல அலுவலர் அவர்கள் தலைமையில் டெங்கு தடுப்புபணிகள் அனைத்து வார்டுப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2) 530 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு (DBC) பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று கொசுப்புழுக்களை அழித்தும், பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. 3) டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசு மருந்து புகை பரப்பும் (Fogging) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4) டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கவும் நோயின் தன்மையை பொறுத்து தேவைக்கேற்ப அரசு இராஜாஜி மருத்துவமனைக்கும் பரிந்துரை செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 5) மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க கூடிய நீர்த் தேக்க தொட்டியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குளோரினேசன் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யப்படுகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தை ஏடீஸ் கொசுக்கள் வளராத வண்ணம் தங்களது வீட்டில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் பயன்பாடற்ற பேப்பர், டீ கப், தேங்காய் சிரட்டைகள், தெர்மாக்கூல் இது போன்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் தேக்கம் ஆகும் தண்ணீர், வீட்டின் பயன்பாட்டிற்காக சேகரித்தும் வைக்கும் தண்ணீர் தொட்டிகள் வாரம் ஒரு முறை சுத்தம் செய்து மூடி வைக்கப்பட வேண்டும். வீட்டில் அருகாமையில் உள்ள ஆட்டு கல் இருந்தால் நீர் தேங்காதவண்ணம் அதனைத் கவிழ்த்தி வைக்கப்பட வேண்டும் என மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்ளப் படுகிறது. எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கு வரும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Next Story