மது பழக்கத்தால் வந்த வயிற்று வலி தாங்க முடியாமல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.
Karur King 24x7 |23 Aug 2024 2:05 PM GMT
மது பழக்கத்தால் வந்த வயிற்று வலி தாங்க முடியாமல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.
மது பழக்கத்தால் வந்த வயிற்று வலி தாங்க முடியாமல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், எஸ்.வெள்ளாளப்பட்டி அருகே உள்ள தொழில்பேட்டை, டீச்சர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 52. இவர் கடந்த சில வருடங்களாகவே மது போதைக்கு அடிமையாகி இருந்தார். இதனால், கடந்த இரண்டு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை 5 மணி அளவில் கூடுதலாக வயிற்று வலி ஏற்பட்டதால், வலி தாங்க முடியாத ராஜேந்திரன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி மைதிலி வயது 40 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த ராஜேந்திரன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story