காங்கேயத்தில் பாழடைந்த வேளாண் துறை குடியிருப்பில் அதிகாரி ஆய்வு

காங்கேயத்தில் பாழடைந்த வேளாண் துறை குடியிருப்பில் அதிகாரி ஆய்வு
காங்கேயத்தில் பாழடைந்த வேளாண் துறை குடியிருப்பில் அதிகாரி ஆய்வு செய்தனர்
காங்கேயம் தாராபுரம் சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் காங்கேயம் வட்டார வேளாண்மை துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தங்கி வேலைக்கு வரும் வகையில் அரசு சார்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அகிலாண்டபுரம் கோவில் பின்புறம் குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு கைவிடப்பட்டுள்ள நிலையில் கவனிப்பாரற்றுக்கிடக்கும் இந்த குடியிருப்பு பாழடைந்து வந்தது. இதை அடுத்து பொதுமக்கள் கோரிக்கையை அளித்ததின் அடிப்படையில் காங்கேயம் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் வசந்தாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் இந்த கட்டிடம் சீரமைப்பு அல்லது புதுப்பிக்கும் பணிக்காக மனு அளிப்பதாக தெரிவித்தார். இந்த கட்டிடம் புதுப்பித்து தந்தாள் அலுவலக பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
Next Story