ரேசன் கார்டு விண்ணப்பித்த நபர் ஓராண்டாகியும் பலனில்லை ரேசன் கார்டு வேண்டாம் என கலெக்டருக்கு மனு
Komarapalayam King 24x7 |23 Aug 2024 3:17 PM GMT
குமாரபாளையம் தாலுக்கா அலுவலத்தில் ரேசன் கார்டு விண்ணப்பித்த நபர் ஓராண்டாகியும் பலனில்லை என்பதால் ரேசன் கார்டு வேண்டாம் என கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா அலுவலத்தில் ரேசன் கார்டு விண்ணப்பித்த நபர் ஓராண்டாகியும் பலனில்லை என்பதால் ரேசன் கார்டு வேண்டாம் என கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார். இது குறித்து மனுதாரர் சிவராஜ் தனது மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 46, ராகவேந்திரா வீதி, ஆஞ்சநேயர் கோவில் அருகில் சிவராஜ் ஆகிய நான் வசிக்கிறேன்.என்னுடைய அலைபேசி நம்பர் :8660295472 தங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் அம்மா. நான் ரேஷன் கார்டு பதிவு செய்வதற்கு முன்பு tollfree நம்பரில் தனி நபர் ஒருவருக்கு ரேசன்கார்டு பதிவு பண்றோம் இவருக்கு eligible இருக்கானு கேட்டதும் அவர்கள் அதற்கான ஆதார் நம்பர்களை உள்ளிட்டு உங்களுக்கு எந்த இடத்தலேயும் ரேசன் கார்டு இல்லை தாராளமாக பதிவு செய்யலாம் என்று சொன்னாங்க அப்பொழுது தாங்களும் தாலுக்கா அளவில் சில முகாமில் அறிவிச்சீங்க இதுவரைக்கும் ரேஷன் கார்டு இல்லாத ஒரு நபர் குடும்ப கார்டு பதிவு செய்யலாம்னு அப்போ பதிவு செய்து கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்டது. எல்லா விசாரணையும் முடிந்து விட்டது தற்சமயம் கூட தாலுக்காவில் போன் செய்து நேரில் அழைத்து விசாரித்த வகையில் கார்டு அனைவருக்கும் வரும்போது உங்களுக்கும் வந்துடும்னு solli அனுப்பினார்கள். ஆனால் எனக்கு 40 வயது திருமணம் ஆகவில்லை நான் ஒரு தனியார் மில்லில் வேலை செய்கிறேன். ரேசன் கார்டு வேண்டி குமாரபாளைய ம் தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் கிடைக்கவில்லை. மருத்துவமனை உள்ளிட்ட எல்லா இடங்களில் ரேசன் கார்டு கேட்கிறார்கள். எனது விண்ணப்பம் தகுதியானது இல்லை என்றால் அதனை தள்ளுபடி செய்திருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தனி நபர் கார்டு இல்லை என்று கூறினால் எனக்கு கார்டு வேண்டாம் அம்மா. நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். என் மனகுமுறல் மற்றும் மன உளைச்சல் அம்மா. தனி நபருக்கு ஓட்டு போடுகிற உரிமை இருக்கும் பட்சத்தில், எனக்கு தனி நபர் ரேசன் கார்டு இருப்பதில் என்ன பிரச்சனைனு ரொம்ப மனஉளைச்சலில் இருக்கிறேன். அம்மா எனக்கே இவ்வளவு மனஉளைச்சல்னா இன்னும் வயதான, படிக்காதவர்கள் என்ன செய்ய முடியும்? ஆன்லைனில் எப்படி பதிவு செய்ய வேண்டுமென்று கூட தெரியாத நபர்கள் எவ்வளவு பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.அம்மா தயவு செய்து எனக்கு தனிநபர் அரிசி ரேசன் கார்டு வழங்குவதற்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
Next Story