ராமநாதபுரம் கோவில் வருடாபிஷேகம் நடைபெற்றது

கீழச்சாக்குளம் தர்மமுனீஸ்வரர், பெரியகருப்பனசாமி கோவில் வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மமுனீஸ்வரர் மற்றும் பெரியகருப்பனசாமி திருக்கோவில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோவில் அமைந்துள்ள அருள்மிகு தர்மமுனீஸ்வரர், பெரியகருப்பனசாமி, நொண்டி கருப்பண்ணசாமி, ராக்கச்சி அம்மன், பேச்சியம்மன், 16பிள்ளைகாளி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குஅழகர்கோவில், ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கொண்டு பூர்ணாகுதி, கும்ப அலங்காரம், 3 கால யாகசாலை பூஜைகள் நடத்தி கும்ப புறப்பாடு சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வேதமந்திரங்கள் இசை வாத்தியங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட நடைபெற்று கும்பத்தில் நீர் ஊற்றி வருடாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் பெரியகருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், பச்சரிசி மாவு, திரவிய பொடி, தேன்,விபூதி சந்தனம் உள்ளிட 16 வகையான அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு பொது அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கீழச்சாக்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story