பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
Virudhachalam King 24x7 |23 Aug 2024 5:33 PM GMT
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் துவாக்குடி தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், சார்பில் பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைப்பெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தொடங்கி வைத்து பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி பற்றிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழக இணைய தள சேவைகள் குறித்து பேசினார். வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மோதிலால், ஜெயக்குமார், காயத்ரி, கண்ணன், சுகுமாரன், கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்திற்கு ஏற்ற பயறு வகை பயிர்களில் புதிய இரகங்கள் மற்றும் அதிக உற்பத்தி, நோய் எதிர்ப்பு இரகங்கள், பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை, இயற்கை வழி முறையில் பயறு வகை இரகங்களில் சாகுபடி செய்யும் பல்வேறு வழிமுறைகள், தாவரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு கரைசல்கள் மூலம் பூச்சிகள் மற்றும் நோய்களை தடுப்பது, பயறு வகை பயிர்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் பயறு வகை பயிர்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Next Story