தேசிய விண்வெளி தினம் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது

தேசிய விண்வெளி தினம் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது
தேசிய விண்வெளி தினம் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 23 தினத்தில் சந்திராயன் - 3 வெற்றிகரமாக நிலவிற்கு செலுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை பெருமையுடன் நினைவு கூறும் பொருட்டு தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. இயற்பியல் துறை தலைவி மற்றும், முதுநிலை அறிவியல் இரண்டாமண்டு மாணவி அமலா வரவேற்புரை வழங்கினார். அதியமான் கல்வி நிறுவங்களின் செயலர் முனைவர் ஷோபா திருமால்முருகன் அவர்கள், சந்திராயன்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலவில் தரையிறக்கப்பட்ட அன்றைய தினத்தில் அனைவரின் எதிர்பார்ப்பும் வெற்றியடைந்ததை பற்றி பேசப்பட்டு வந்தது. அதுபோல இயற்பியல்துறை மாணவிகள் வருங்காலத்தில் பல்வேறு சாதனைகள் செய்து இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும் என்றும் தலைமையுரை வழங்கினார். அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரின் முதல்வர் முனைவர். சீனி திருமால்முருகன் அவர்கள், மாணவிகள் ஒவ்வொருவரும் சுயவிருப்பதுடன் தினசரி அறிவியல் நிகழ்வுகளை ஆர்வமுடன் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும், எதிர்கால இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் அடைய மாணவிகள் பங்காற்ற வேண்டும் என்றும் சிறப்புரை வழங்கினார். மேலும் மாணவிகளிடையே விண்வெளி பற்றிய பேச்சுப்போட்டி, காணொளி போட்டி, மின்பதிவு, விண்வெளி ஏவுகணை மாதிரி வடிவமைப்பு போட்டி மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சி போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். நிகழ்வின் இறுதியாக முதுகலை இரண்டாமாண்டு மாணவி ஐஸ்வர்யா நன்றியுரை வழங்கினார்.
Next Story