புதிய கட்டடங்கள்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
Thoothukudi King 24x7 |24 Aug 2024 4:01 AM GMT
விளாத்திகுளம் தொகுதியில் ரூ.1.02 கோடியில் புதிய கட்டடங்கள்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் ரூ.1.02 கோடியில் புதிய கட்டடங்களை மக்களவை உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட எட்டயபுரம், தாப்பாத்தி, வி.புதூர், பூதலாபுரம், என். ஜெகவீரபுரம், தத்தனேரி ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை, சமுதாயக் கூடம் உள்ளிட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தாப்பாத்தி கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடம், பூதலாபுரம் மற்றும் என். ஜெகவீரபுரம் கிராமங்களில் தலா ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம், எட்டயபுரத்தில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம்,புதூரில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, தத்தனேரி ஊராட்சியில் ஊசிமேசியாபுரம், மாத ராஜபுரம் கிராமங்களில் தலா ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் பேரூராட்சி மன்றத் தலைவர்கள் ராமலட்சுமி சங்கரநாராயணன், சூர்யா அய்யன்ராஜ், வனிதா அழகுராஜ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மகாராஜன், கா. மகேஸ்வரன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், திமுக ஒன்றிய செயலர்கள் ராதாகிருஷ்ணன், அன்பு ராஜன், ராமசுப்பு, நவநீத கண்ணன், பேரூர் செயலர்கள் வேலுச்சாமி, மருதுபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story