சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்

சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம், ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரிவுக்கான பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும் உட்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கென தனித்தனியாக தேர்தல் பிரிவு அதிகாரிகளை ஏற்படுத்த வேண்டும் உட்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநில அளவில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நேற்று துவக்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம், ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அளவில் 900 பேர் வரை பணிபுரிகின்றனர். இவர்களில் 300க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர், ஊழியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி செயலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று அனைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
Next Story