சிவகங்கை கோவில்களில் கும்பாபிஷேகம்

சிவகங்கை கோவில்களில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலத்தில் சங்கிலிக்கருப்பர், நொண்டிக்கருப்பர், பெருமாண்டியம்மன் கோயில்களில் கும்பாபிேஷகம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலத்தில் சங்கிலிக்கருப்பர், நொண்டிக்கருப்பர், பெருமாண்டியம்மன் கோயில்களில் கும்பாபிேஷகம் நடைபெற்றது. நாட்டார்மங்கலத்தின் கிராம தெய்வங்களான கருப்பர், பெருமாண்டியம்மன் கோயில்களுக்கு திருப்பணிகள் நடந்து கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கிராம தேவதைகள் பிரார்த்தனையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து முதற்கால யாக சாலை நடந்து பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை கோபூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. பின்னர் இரண்டாம் யாகசாலை பூஜை முடிந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து காலை 10:15 மணிக்கு கருப்பருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரால் கும்பாபிேஷகம் நடைபெற்றது. அமைச்சர் பெரியகருப்பன், திருப்புத்துார் ஒன்றியத் தலைவர் சண்முகவடிவேல், ஊராட்சி தலைவர் திலகவதி பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story