மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி மனு நிராகரிப்பு

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி மனு நிராகரிப்பு
மூதாட்டி மனு நிராகரிப்பு
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பரப்பாடி பகுதியை சேர்ந்த மூதாட்டி பேச்சியம்மாள்(93), தனக்கு உதவி தேவை என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க ஆட்சியருக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் மூதாட்டி குறித்து விசாரணை நடத்தியதில் மூதாட்டிக்கி சொந்தமாக நிலம் உள்ளதாகவும், பேரன்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறி மூத்தாட்டி மனு நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
Next Story