சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Thirukoilure King 24x7 |24 Aug 2024 4:57 AM GMT
அகற்றம்
சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்றுமாறும், இல்லையெனில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்படும் என்று நேற்று முன்தினம் மாலை திடீரென அறிவிப்பு செய்யப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்புக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று காலை பேரூராட்சி மற்றும் தாலுகா அலுவலகத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் சாலையோர ஆக்கிரமிப்புகள் தீபாவளி பண்டிகைக்கு பின் அகற்றுமாறும், டாடா ஏஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாலையோரத்தில் நிறுத்தி வியாபாரம் செய்வதை தடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், சாலையோர ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என்று தெரிவித்து பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், சின்னசேலம் தாசில்தார் மனோஜ்முனியன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சாலையோரத்தில் இருந்த கடைகளின் போர்டுகள், பெட்டி கடைகள், விளம்பர பதாகைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளை கிரேன், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதற்கிடையே கடையின் முன்புள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை ஒத்தி வைக்குமாறு கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story