திருப்போரூர் வி.ஐ.டி., பல்கலையில் உணவே மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவே மருந்து விழிப்புணர்வு துவக்க நிகழ்ச்சி, நேற்று நடந்தது.இதில், சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று பேசினர். விழாவில், ஊட்டச்சத்து உணவு சார்ந்த கண்காட்சி அரங்குகள் திறக்கப்பட்டன. விழிப்புணர்வு குறும்படம், உணவே மருந்து சின்னம் மற்றும் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. அதேபோல், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் திட்டம் வாயிலாக, பசியோடு இருப்பவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த வாகனத்திற்கான போக்குவரத்து பராமரிப்பு செலவாக, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விசுவநாதன் 5.40 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர்களிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், கலெக்டர் அருண்ராஜ், உணவு பாகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
Next Story

