லாரி மீது லாரி மோதி விபத்து ஓட்டுநர் பலியான சோகம்...
Sangagiri King 24x7 |24 Aug 2024 7:27 AM GMT
சங்ககிரி: தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பின்புறத்தில் இடித்து லாரி ஓட்டுநர் பலி....
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பழுதாகி சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு.... திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையிலிருந்து கொல்கத்தாவிற்கு லாரியில் பேப்பர் பாரம் ஏற்றி ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் மங்கரங்கம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் டீசல் டேங்க் பழுதாகியதால் லாரியின் ஓட்டுனர் சரவணன் உடனடியாக லாரியை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சங்ககிரி சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்து பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தி பழுதாகி நின்ற லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது கோவையிலிருந்து சென்னைக்கு ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் பொருட்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்பக்கத்தில் பலத்த சத்தத்துடன் போதியதில் தென்காசி புளியங்குடி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் லாரியில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி போலீசார் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்த போக்குவரத்துகளை சீர்படுத்தி சங்ககிரி தீயணைப்பு துறையினருடன் இணைந்து இடிபாடுகளை சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.தேசிய நெடுஞ்சாலையில் 2மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
Next Story