ராமநாதபுரம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது

ராமநாதபுரம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது
கமுதி கோவிலாங்குளம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் கோவிலாங்குளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாவட்ட ஆய்வுக்குழு துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில் கமுதி தாசில்தார் காதர் முகைதீன் முன்னிலை நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் சண்முகநாதன் துவக்கி வைத்தார். காத்தனேந்தல் , கொம் பூதி , ஓ.கரிசல்குளம், எருமை குளம் ,அரியமங்கலம் கிராமத்தைச் சார்ந்த மக்கள் மகளிர் உரிமைத் தொகை , முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் ஊராட்சி தலைவர்கள் செந்தில் (காத்தனேந்தல்), அரசம்மாள் (கொம் பூதி), ராஜா மணி (ஓ.கரிசல்குளம்), பெரியசாமி (எருமைகுளம்), முனியம்மாள் (அரிய மங்கலம்) ஊராட்சி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமலோற்பவ ஜெயராணி, துணை வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, ஊராட்சி செயலர்கள் ஜெயசித்ரா, மூர்த்தி, ராம ஜெயம், ரமேஷ், வசந்தகுமார், காளீஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story