நாலுகால் குட்டை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து.வி.ஏ.ஒ. புகார்.
Karur King 24x7 |24 Aug 2024 8:06 AM GMT
நாலுகால் குட்டை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து.வி.ஏ.ஒ. புகார்.
நாலுகால் குட்டை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து.வி.ஏ.ஒ. புகார். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தென்னிலை தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் வயது 42. ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 9 மணி அளவில் தென்னிலை தென்பாக்கம் கிராமத்துக்கு உட்பட்ட நாலுகால் குட்டை பஸ் ஸ்டாப் அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது கோவை மாவட்டம், சக்தி கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் பவளவள்ளி கிரன் வயது 24 என்பவர், வேகமாக ஓட்டி வந்த கார், நடந்து சென்ற முதியவரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவருக்கு தலை, வலது கை, இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த தென்னிலை தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான பவளவள்ளி கிரண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.
Next Story