கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது

கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது
கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சுமார் 1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு வேலை உத்தரவு வழங்கிடவும், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பொது நிதியில் வேலைகளை தேர்வு செய்வதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி நாகராஜ் , நர்மதா ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம், குப்புசாமி உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இதில் கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற செயலாளர் நாகராஜ் நன்றிரை கூறினார்.
Next Story