கரூரில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரகசிய பயிற்சி. அதிகாரிகள் அதிர்ச்சி.
Karur King 24x7 |24 Aug 2024 9:22 AM GMT
கரூரில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரகசிய பயிற்சி. அதிகாரிகள் அதிர்ச்சி.
கரூரில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரகசிய பயிற்சி. அதிகாரிகள் அதிர்ச்சி. "ஹிஸ் உத் தஹ்ரீர்" என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதற்காக பயிற்சி அளித்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஹமீது உசேன். இவர் கெமிக்கல் இன்ஜினியர். இவர் சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் கௌரவ பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவரது தந்தை அகமது மன்சூர், இளைய சகோதரர் அப்துல் ரகுமான் இவர்கள் மூவரும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட "ஹிஸ் உத் தஹ்ரீர்"என்ற அமைப்புக்கு ஆட்களை சேர்த்து உள்ளனர். இதற்கு செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கத்தை சேர்ந்த முகமது மவுரிஸ், சேலையூர் காதர் நவாஸ் ஷெரீப், சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அகமது அலி உமரி ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஆறு பேரும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் வகுத்து தந்த சதி திட்டத்தின் படி செயல்பட்டுள்ள இந்த ஆறு பேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஹமீது உசேன் கூட்டாளிகள் வீடுகளில் சோதனைகள் நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இந்த ஆறு பேரையும் சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 6- நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஹமீது உசேன் கூட்டாளிகள் கரூரிலும் ரகசிய பயிற்சி மையம் நடத்தியது தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகள் கரூரில் ரகசிய பயிற்சி மையம் அமைத்தது அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story