நடந்தை பஸ் ஸ்டாப் அருகே காரும் டூவீலரும் நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

நடந்தை பஸ் ஸ்டாப் அருகே காரும் டூவீலரும் நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
நடந்தை பஸ் ஸ்டாப் அருகே காரும் டூவீலரும் நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம், பெருமாள் வலசு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி வயது 72. இவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 8 மணி அளவில், சின்னதா தாராபுரத்தில் இருந்து க.பரமத்தி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் நடந்ததை பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர் மாவட்டம்,புகலூர் தாலுகா, காருடயம்பாளையம் அருகில் உள்ள மேலப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் வயது 33 என்பவர் வேகமாக ஓட்டிவந்த கார்,முத்துச்சாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த முத்துசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாக்கியராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்னதாராபுரம் காவல்துறையினர்.
Next Story