கள்ளை அருகே டூவீலரில் அழைத்துச் சென்ற மூதாட்டி தவறி விழுந்து விபத்து.
Karur King 24x7 |24 Aug 2024 9:51 AM GMT
கள்ளை அருகே டூவீலரில் அழைத்துச் சென்ற மூதாட்டி தவறி விழுந்து விபத்து.
கள்ளை அருகே டூவீலரில் அழைத்துச் சென்ற மூதாட்டி தவறி விழுந்து விபத்து. கரூர் மாவட்டம் குளித்தலை ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மனைவி ஜோதி வயது 55. இவரது மகன் மனோஜ் குமார் வயது 29. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு 10 மணியளவில், பேரூரிலிருந்து கள்ளை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் கள்ளை பகுதியில் உள்ள சாயப்பட்டறை அருகே செல்லும்போது, டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த ஜோதி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு, தோகைமலை பகுதியில் செயல்படும் ஏபிஜே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஜோதியின் மகள் பூமதி வயது 31 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், கவன குறைவாகவும், விபத்து ஏற்படும் வகையில் ஓட்டிய மனோஜ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தோகைமலை காவல்துறையினர்.
Next Story