ராமநாதபுரம் விற்பனைக்கு தயாராக உள்ள கலர்ஃபுல் விநாயகர் சிலைகள்

சுற்றுச்சூழக்கு உகந்த கலர்ஃபுல் விநாயகர் சிலைகள் தயாரிப்பு
ராமநாதபுரம் அருகே சுற்றுச்சூழக்கு உகந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு கண்கவர் வண்ண வண்ண நிறங்களில் விற்பனைக்கு தயாராக உள்ளன. மாவட்டம் முழுவதும் 500 சிலைகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் இயற்கையான மரக்கூழ், மரவள்ளி கிழங்கு மாவு, பேப்பர் ஆகியவற்றை கொண்டு எளிதில் கரைந்து மீன்களுக்கு இரையாகும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 500 இடங்களில் வைக்கப்பட உள்ளதாகவும், செப் 9ம் தேதி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், திருப்புல்லாணி, பரமக்குடி, தொண்டி, ஆர். எஸ். மங்கலம், போன்ற ஊர்களில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story