எருமை மாடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் குலதெய்வ விநோத வழிபாடு
Sivagangai King 24x7 |24 Aug 2024 11:26 AM GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே பழமலை நகரில் எருமை மாடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் குலதெய்வ விநோத வழிபாடு ஆடிபாடி கொண்டாடினர்.
சிவகங்கை - காளையார்கோவில் சாலையில் பையூர் பழமலைநகரில் நரிக்குறவர் குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குல தெய்வமான காளி மீனாட்சி மதுரை வீரன் சாமிக்கு படையலிட்டு எருமை மாடு வெட்டி பொங்கல் வைக்கும் வினோத பூஜையை நடத்தினர். நரிகுறவர் குடியிருப்பு பகுதிக்கு முன்பு உள்ள நிலப்பரப்பில், ஆகஸ்ட் 22ல் காப்பு கட்டி விரதம் இருந்து நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகளை துவக்கினர். 3 நாள் பூஜை நடத்தி இன்று எருமை மாடுகளையும், ஆட்டு கிடாக்களையும் வெட்டி பலி கொடுத்து பூஜை நடத்தினர். குல தெய்வத்திற்கு ஆண்டுதோறும் கிடா வெட்டி, பெரிய பூஜை செய்வது வழக்கம். பூஜைகள் நடத்தும் போது தொழிலுக்காக வெளியூர்களில் உள்ள உறவினர்களும் தவறாது கலந்து கொண்டு குலதெய்வம் காளியம்மனுக்கு எருமை கிடாவையும், மீனாட்சி அம்மனுக்கு ஆட்டுக் கிடாவையும் மதுரை வீரனுக்கு தீச்சட்டி ஏந்தியும் பூஜை செய்கின்றனர். பூஜைக்காக 5 எருமைகளும், 10 க்கும் மேற்பட்ட ஆடுகளும் பலியிட்ட இவர்கள் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை ஆட்டு கிடாகளும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய்க்கு எருமை மாடுகளையும் வாங்கி பூஜைக்காக 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர் அதிகாலையில் கிடா வெட்டி, ரத்தத்தை குடித்து காளியம்மனுக்கு படையல் வைத்தும் தொடர்ந்து ரவை ரொட்டிகளை செய்து, பால் பூஜைகள் நடத்தப்படும். காளி அசுரனை வதம் செய்யும் போது தரையில் இந்தும் ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்தொழும் என்பதால் எறுமை கிடா வெட்டியதும் சிந்தாமல் ரத்தம் குடித்தால் நோய் நொடிகள் வராது என்பது நம்பிக்கை . இதுவரை மருத்துவமனைக்கே செல்லாத இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள இவர்களது உறவினர்கள் எங்கே இருந்தாலும் இந்த விழாவில் பங்கேற்று வழிபாடுகள் நடத்துகினர். தொடர்ந்து, மூன்று நாட்கள் இங்கே தங்கி, பூஜைகள் செய்து வருகின்றனர் பூஜைக்குப் பின் எருமை மாடுகளை உரித்து, உடல் உறுப்புகளை, கருவாடாக மாற்றி உறவினர்கள் ஊருக்கு எடுத்துச் செல்வர். மிஞ்சும் பாகங்களை உலர்த்தி, கருவாடாக பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள உறவினர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தாலும் ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடா வெட்டி காளியம்மனுக்கு பூஜைகள் செய்து வருகின்றனர். இந்த பூஜையில் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் குலதெய்வத்தை வழிபட்டால் நோய் நொடியின்றியும் ஊசி பாசி தொழிலும் சிறப்பாக அமையும் என்பது இவர்களது நீண்ட கால நம்பிக்கை என்றனர்
Next Story