டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்

உடல்நலம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முறுக்கோடை கிராமத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்காக சுகாதாரத் துறை சார்பில் தடுப்பு ஏற்பாடுகள் நடைபெற்றன . வட்டார மருத்துவ அலுவலர் ஜக்கப்பன் தலைமையில் சுகாதாரத்துறை பணியாளர்களுடன் பள்ளி மற்றும் பொது இடங்களில் புகை மருந்து அடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருப்பசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார், அமர்த்தியன், லோகராஜன் உடன் இருந்தனர். மேலும் மாவட்ட மலேரியா கட்டுப்பாட்டு அலுவலர்கள் இந்தப் பகுதியினை ஆய்வு செய்து நோய் கட்டுபாட்டு சம்பந்தமான பணிகளும் செய்யப்பட்டது
Next Story