நெல் அறுவடை இயந்திரம் திடீர் பற்றி எரிந்ததால் பரபரப்பு

X
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த முள்ளி கிராமத்தில் லோகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்து கொண்டிருந்த போது அறுவடை இயந்திரம் மின்சார கம்பியின் மீது பட்டு வாகனம் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பத்திரமாக உயிர் தப்பினார். இதையடுத்து மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்து.. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நெல் அறுவடை இயந்திரத்தின் ஏற்பட்ட தீயினை சுமார் அரை மணி நேரமாக போராடி அனைத்தனர்.. பின்பு விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Next Story

