காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு : வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி
Krishnagiri King 24x7 |24 Aug 2024 12:35 PM GMT
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு : வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு : வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி காதலனின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவரது உடல்களை கைப்பற்றி கெலமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கெலமங்கலம் அடுத்துள்ள கௌதாளம் கிராமத்தை சேர்ந்த மாரப்பா என்பவரது மகன் நரசிம்மமூர்த்தி (22) இவர் வீடுகளுக்கு ஜன்னல் அமைக்கும் வேலைகளை செய்து வந்தார். கௌதாளம் கிராமத்தை அடுத்துள்ள பச்சப்பனட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் - ராணி ஆகியோரின் மகள் யுவஸ்ரீ (17) இவர் கிருஷ்ணகிரியில் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நரசிம்ம மூர்த்தியும் யுவஸ்ரீயும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நரசிம்மமூர்த்தி யுவஸ்ரீயை தொந்தரவு செய்வதாக யுவஸ்ரீயின் தாய் ராணி கடந்த மாதம் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நரசிம்ம மூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெயிலில் வெளியே வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து நரசிம்ம மூர்த்தியும் அவரது காதலியுமான யுவஸ்ரீயும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிகிறது. கிருஷ்ணகிரியில் படித்து வந்த யுவஸ்ரீ நேற்று தான் ஊருக்கு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நரசிம்ம மூர்த்தியை பார்ப்பதற்காக கௌதாளம் கிராமத்திற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் இரவில் நரசிம்ம மூர்த்தியின் வீட்டின் அருகே உள்ள ஒரு சீட்டு வீட்டில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நரசிம்ம மூர்த்தியின் தந்தை மாரப்பா சீட்டு வீட்டின் கதவு திறக்கப்படாததால் ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது உள்ளே நரசிம்ம மூர்த்தியும் யுவஸ்ரீயும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சாந்தி ஆகியோர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து உயிரிழந்த காதல் ஜோடியின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் காதலுக்கு யுவஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Next Story