பார்த்தீனிய விழிப்புணர்வு வாரம்

பார்த்தீனிய விழிப்புணர்வு வாரம்
அழிப்பது குறித்து செயல் விளக்கப் பயிற்சி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பார்த்தீனிய விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமையிலான வேளாண் விஞ்ஞானிகள் பெரியவடவாடி முருகன்குடி கிராமங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பார்த்தீனிய கலைச்செடியின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:- பார்த்தீனியம் ஒருஅயல்நாட்டுகளையாகும். இது நம் பல்லுயிர் பெருக்கத்திற்கு சவாலாகஉள்ளது. மேலும் தோல் நோய்களை உண்டாக்குகிறது. 1950 களில் தான் முதலில் இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்டது. தற்போது நாடெங்கும் 35 மில்லியம் எக்டர் பரப்பளவிற்கு மேல் பரவியுள்ளது. இது பயிர் இல்லாத இடங்களான இரயில்வே தண்டவாளங்கிலும், ரோட்டோரங்களிலும், தரிசுநிலங்களிலும் பூங்காக்கள் போன்ற இடங்களிலும் காணப்படுகிறது. ஒருவருட செடி, 1.5 -2 மீட்டர் வரைவளரும், விதைகளின் மூலமாகவே அதிகமாக பரவுகிறது. இச்செடி அதிகவிதைகளை உற்பத்திசெய்கிறது. 5000 முதல் 25000 விதைகள் மிக எளிதாக காற்று, தண்ணீர், மனிதனின் நடமாட்டம் மூலமாக பரவுகிறது. விதை எடை மிகவும் குறைவாக இருப்பதால் மிக எளிதாக பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த தன்னார்வ நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி வளாங்களில் பார்த்தீனியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பூ பூப்பதற்கு முன் பிடிங்கி உரமாக மாற்றுதல், தரிசு நிலங்களில் கிளைப்போசைட் மருந்தினை 1-1.5 சதவீதம் தெளித்தல் மற்றும் புல்வகை களைகளை பாதுகாக்க வேண்டுமெனில், மெட்ரிபுசின் (0.3-0.5) சதவீதம் அல்லது 2,4-டி 1-1.5 சதவீதம் தெளித்தல். சைக்கோகிரமா பைகாலரேட்டா என்ற வண்டினை பார்த்தீனியம் அதிகமுள்ள இடங்களில் ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் இடுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இதனை அழிப்பது குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள். தொடர்ந்து விருத்தாசலம் ஆண்டனி பப்ளிக் பள்ளியிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கிளைபோசேட் 15 மி.லி/லிட்டர் என்ற அளவில் கலந்து தெளித்து பார்த்தீனியம் செடிகளை அழிப்பது குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.
Next Story