ஆரணியில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் குறித்து மாவட்ட பயிலரங்கம்.

ஆரணியில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் குறித்து மாவட்ட பயிலரங்கம்.
X
ஆரணி.ஆக. 24 ஆரணி அருகே மெய்யூர் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றதில் பேசினார் மாநிலசெயற்குழு உறுப்பினர் தசரதன்.
ஆரணி அடுத்த மெய்யூர் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட பயிலரங்கம் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளரும், மத்திய நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளருமான சைதை.வ.சங்கர் தலைமை தாங்கி நடத்தினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் சி.ஏழமலை, மாநிலசெயற்குழு உறுப்பினர் வி.தசரதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை குறித்து பயிற்சி அளித்தனர். இதில் ஓபிசி அணியின் மாநில துணைத்தலைவர் மோகன், இளைஞரணி நிர்வாகி புவனேஷ், மாவட்ட நிர்வாகி துரை நாட்டார், வடக்கு மண்டல தலைவர் குணாநிதி, முன்னாள் மாவட்டதலைவர் சாசா வெங்கடேசன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story